மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை
மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை , அல்லது மவுண்ட் ஈ சிங்கப்பூரில் பார்க்வே ஹெல்த் நிறுவனத்தால் இயக்கப்படும் 345-படுக்கைகள் கொண்ட தனியார் மருத்துவமனை ஆகும். 1976இலிருந்து இயங்குகின்ற இந்த மருத்துவமனை அலுவல்முறையாக திசம்பர் 8, 1979 அன்று துவக்கப்பட்டது. இந்த மருத்துமனை மற்ற மூன்றாம் நிலை சேவைகளைத் தவிர இதயவியல், புற்றுநோயியல், மற்றும் நரம்பணுவியல் துறைகளில் சிறப்புநிலையில் சிகிட்சை அளிக்கிறது. இது பல உறுப்பு மாற்றுச் சிகிட்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டு முதல் இதன் உரிமையாளராக பார்க்வே ஹெல்த் உள்ளது.
Read article